மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்திடும் வண்ணம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்பேரில் ஒற்றைச்சாரா முறையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குதல், ெரயில்வே பஸ் பாஸ் ஆவணம் வழங்குதல், காதொலிக்கருவி, தையல் மிஷின், மாற்றுத்திறனாளி உபகரண பொருட்கள் வழங்குதல், கை ஸ்டிக், மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புகார் மனுக்களும் பெறப்பட்டன. இந்த முகாமில் மாற்றுத்திறனாளி அலுவலக பொறுப்பு கனகராஜ், முதுகுளத்தூர் அரசு மருத்துவர் நாகரஞ்சித், சிறப்பு ஆசிரியர் குமரேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் சங்க தலைவர் ராஜேஷ், பொறுப்பாளர் மயில்சாமி தங்கப்பாண்டி வில்வத்துறை, மருத்துவர்கள், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர்கள், மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story