ஸ்ரீஅமராவதி கலை-அறிவியல் கல்லூரியில் மருத்துவ முகாம்
ஸ்ரீஅமராவதி கலை-அறிவியல் கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை திருமலைநாதன்பட்டியில் செயல்படும் ஸ்ரீஅமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்கள், ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் நாராயணசாமி, கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் உஷா, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், நவீன்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜசேகரன் மற்றும் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.