திருப்பேர் கிராமத்தில் மருத்துவ முகாம்


திருப்பேர் கிராமத்தில் மருத்துவ முகாம்
x

சென்னை சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் சார்பில் இலவச மருத்தவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திருப்பேர், பங்காரம்பேட்டை, சென்ராயன்பாளையம், அரும்பாக்கம் ஆகிய கிராமங்களில் சென்னை சமூகப்பணி கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் சுகாதாரக் கேடு, கல்வி இடைநிறுத்தலால் மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், மென்பொருள் சாதனங்களின் நன்மைகள்-தீமைகள், போதை பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று சென்னை சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் சார்பில் இலவச மருத்தவ முகாம் நடைபெற்றது. முகாமில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.


Next Story