மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அட்டை மற்றும் திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் போன்ற பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மருத்துவ முகாமில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், 4 புகைப்படம், மேலும் விவரம் பெறுவதற்கு கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 19-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அருப்புக்கோட்டை தேவாங்கர் நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைெபறுகிறது. 26-ந் தேதி சாத்தூர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் மன்றத்திலும், செப்டம்பர் 16-ந் தேதி சிவகாசி ஏ.எஸ்.கே.டி. திருமண மண்டபத்திலும் நடைபெறும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.