நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாருக்கு மருத்துவ முகாம்


நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாருக்கு மருத்துவ முகாம்
x

நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடந்தது.

மருத்துவமுகாம்

குமரி மாவட்ட காவல்துறை மற்றும் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி ஆகியவை சார்பில் போலீசருக்கு மருத்துவ முகாம் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது.

முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் டாக்டர்கள் சரவணன், தேவி ரேஷ்மா, விஜய், சமீன் ஆகியோர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். சர்க்கரை நோய், இதய நோய், பல் மருத்துவம், மகளிருக்கான சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் உள்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் போலீஸ் துறையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய இந்த மருத்துவ முகாம் மாலை வரை நடந்தது.


Next Story