தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x

குன்னூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, தூய்மை பணியாளர்களின் உடல்நிலை சோதிக்கப்படுகிறது. குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் குன்னூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது இதில் சளி, இருமல், காய்ச்சல், ரத்தசோகை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அதிகாரி மால்முருகன், சித்தநாதன் செய்திருந்தனர்.


Next Story