பழங்குடியின மக்களுக்கு மருத்துவ முகாம்


பழங்குடியின மக்களுக்கு மருத்துவ முகாம்
x

பந்தலூரில் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

நீலகிரி

பந்தலூர்,

கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்படி, தேவாலா வனத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், இல்லம் தேடி இலவச மருத்துவ முகாம்கள் பந்தலூர் அருகே கூவமூலா உள்பட பழங்குடியின கிராமங்களில் நடைபெற்றது. இதற்கு வனச்சரகர் அய்யனார் தலைமை தாங்கினார். டாக்டர் நாகராஜ் மற்றும் செவிலியர்கள் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் வனவர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன், வனகாப்பாளர்கள் தம்பகுமார், அருண்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story