மக்களை தேடி மருத்துவ முகாம்


மக்களை தேடி மருத்துவ முகாம்
x

மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வில்லியம்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சரஸ்வதி தலைமையில், சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி மற்றும் குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள். மேலும் நம்மை நோய் தாக்காமல் இருப்பதற்கு நாம் எவ்வாறு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story