மக்களை தேடி மருத்துவ முகாம்


மக்களை தேடி மருத்துவ முகாம்
x

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் ஊராட்சி ஐந்து தலைப்பு வாய்க்கால் அம்மா பூங்கா வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் எஸ்.கே. குமரவேல் தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலை வகித்தார். செ. ராமலிங்கம் எம்.பி. முகாமினை தொடங்கி வைத்தார். இதில் திருப்பனந்தாள் ஒன்றியக்குழு துணை தலைவர் கோ. க. அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் சாமிதுரை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புகழேந்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் ெசய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


Next Story