திருவாரூர் மாவட்டத்தில், 87 ஆயிரத்து 200 பேர் பயனடைந்துள்ளனர்


திருவாரூர் மாவட்டத்தில், 87 ஆயிரத்து 200 பேர் பயனடைந்துள்ளனர்
x

முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில், 87 ஆயிரத்து 200 பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்


முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில், 87 ஆயிரத்து 200 பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்ட 4-வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பேருக்கு ஆறுதல் பரிசு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன்னார்குடி, திருவாரூர் மெடிக்கல் சென்டர் ஆகிய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ், சிறப்பாக செயல்பட்ட 4 தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகள்

அப்போது அவர் கூறியதாவது:-உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டம் கடந்த 2009- ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒருங்கிணைத்து 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

87 ஆயிரத்து 200 பேர்

திருவாரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இதுவரை, 87 ஆயிரத்து 200 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்கு ரூ.159 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரத்து 590 தமிழக அரசால் செலவிடப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பாக விவரங்ளை அறிவதற்கும், குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைபேசி எண்: 18004253933 மூலம் தொடர்பு கொண்டு பயன பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.கூட்டத்தில் இணை இயக்குனர் (சுகாதாரபணிகள்) செல்வகுமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story