மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை
மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
துறையூர்:
மருத்துவக்கல்லூரி மாணவர்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பெருமாள்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் லிங்கேஸ்வரன் (வயது 20). இவர் புதுச்சேரியில் உள்ள மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு அவர் சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்கச்சென்றார். ஆனால் நேற்று முன்தினம் காலை 10.30 மணி வரை அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், மாடிக்கு சென்று பார்த்தார்.
தற்கொலை
அங்கு மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் லிங்கேஸ்வரன் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் சத்தம் போட்டார். இதையடுத்து லிங்கேஸ்வரனை கீழே இறக்கி அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக பெற்றோர் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், லிங்கேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் அங்கு வந்து லிங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
மேலும் இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லிங்கேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.