மக்களை தேடி மருத்துவம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மக்களை தேடி மருத்துவம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மக்களை தேடி மருத்துவம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் மாவட்ட மக்களை தேடி மருத்துவம் ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் கனிமொழி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயபாரதி, சந்திரலேகா, சோனா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் பரசுராமன், மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் தன்னார்வலர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். கர்ப்பிணி ஊழியர்களுக்கு மகப்பேறுகால சலுகை வழங்க வேண்டும், ஊழியர் திறன் வளர்க்கும் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் சங்க முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகளை மனுவாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.


Next Story