செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் வெற்றி
விளையாட்டு போட்டிகளில் செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள செம்போர்டு சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் மாதேஷ், தருண், சக்திவேல், ஹேமந்த், ஸ்வரன் சுசீதரன், லிக்கித் ஆகியோர் தெலுங்கானா மாநிலம் நாக்சரம் மாவட்டத்தில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ தென் மண்டல இறகு பந்து போட்டியில் கலந்துகொண்டு கால் இறுதி சுற்று வரை முன்னேறினர். தேசிய அளவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் இரட்டை கொம்பில் அகமத் பர்ஹான், அகமத் அத்னான் ஆகியோர் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். தமிழ்நாடு சதுரங்க கழகம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ராகவேந்திரன் மாநில அளவில் 15-வது இடமும், மாவட்ட அளவில் 2-வது இடமும் பெற்றார். மாவட்ட அளவில் 16-வது இடம்பெற்ற கிரிசங்கர், 23-வது இடம் பெற்ற திவாகர், 26-வது இடம் பெற்ற ஹர்சவர்தினி உள்ளிட்ட அனைத்து வெற்றியாளர்களையும் பள்ளி தாளாளர் சுப்பிரமணியம், செயலாளர் ஆர்.கிருபாகரன், இணை செயலாளர் ஆர்.சிங்காரவேலன், குறிஞ்சி அறக்கட்டளை உறுப்பினர் வி.கே.ஆனந்த் ஆகியோர் வாழ்த்தினார். உடன் பள்ளி முதல்வர் டாக்டர்.பிரசாந்த், பள்ளி நிர்வாக அதிகாரி கார்த்திக் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயகுமார், சதீஷ்குமார, பள்ளி மேலாளர் சிவா ஆகியோரும் மாணவர்களை வாழ்த்தினார்கள்.