மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருச்சி
வையம்பட்டி:
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே குமாரவாடியில் மீனாட்சி அம்பாள் உடனுறை சுந்தரேஸ்வர் கோவில் உள்ளது. மிகவும் பழைமையான இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து நேற்று கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் ெசய்யப்பட்டது. இதையடுத்து சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story