ஓசூரில்தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் கூட்டம்


ஓசூரில்தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் கூட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2023 1:00 AM IST (Updated: 25 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பில், எம்.ஜி.ரோடு காந்தி சிலையருகே எழுச்சிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் நரசிம்மா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கங்காதரன் மற்றும் மஞ்சு சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம் இணைப்பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார், உத்தரகாண்ட் ஆதீனம் சாய் விபூதியம்மா, பதஞ்சலி யோகா மைய மாநில தலைவர் ஓசூர் பாரஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், இந்து முன்னணி அமைப்பின் சார்பிலும் எழுச்சிக்கூட்டம் நடைபெற்றது.


Next Story