முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்
அரூரில் உள்ள அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடந்தது.
தர்மபுரி
அரூர்:
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அரூரில் உள்ள அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் நாராயணன், மாநில துணை தலைவர் கருணாநிதி, மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், பாரதிதாசன், வெற்றிச்செல்வன், முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். வாயிற்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story