கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்க பொதுக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்க பொதுக்குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்க பொதுக்குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
சங்க பொதுக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு, ராஜகோபால், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, கல்லூரி துணை முதல்வர் சாத்விகா, நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
நன்கொடையாளர்கள் மூலம் ரூ.1 கோடியை வங்கியில் இட்டு வைப்பு சேமித்து, அத்தொகைக்கான அரசு மருத்துவமனை பராமரிப்பு பணிகளுக்காக செலவு செய்து வர பெற்றுள்ளது. இந்த சங்கம் 2009-10-ம் ஆண்டு காலத்தில் பதிவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் சங்கம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததை புதுப்பிக்கவும், சங்க வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டம்
மேலும், சங்கம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சங்க பெயர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பராமரிப்பு சங்கம் என மாற்றம் செய்வது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனி தொடர்ந்து ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம், 3 மாதத்திற்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.