திருச்செங்கோட்டில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு
திருச்செங்கோட்டில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு நடந்தது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு நடைபெற்றது. சரவணன், மாதவி தலைமை தாங்கி, எழுத்தாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நன்மாறன் மற்றும் சின்னபாரதி, கருப்புகருணா ஆகியோரின் உருவப்படங்களை திறந்து வைத்தனர். ரவிநாத் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். நித்தியானந்தன் வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் மேட்டூர் வசந்தி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வக்கீல் சேகரன் பணி அறிக்கை வாசித்தார். வக்கீல் கோபி கலை இலக்கிய அறிக்கையை சமர்ப்பித்தார். விநாயகா பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சன்யா புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். மாநாட்டில் எழுத்துரிமை, கருத்துரிமையை நசுக்கும் சக்திகளுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தி இயற்ற வேண்டும். எழுத்தாளர் சுபாவின் அனைத்து புத்தகங்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.