குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்


குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை   மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
x

குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்

குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

மன்னார்குடி நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் செண்ணுகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

ஆர்.ஜி.குமார் (அ.தி.மு.க.):- நகராட்சிக்கு சொந்தமான குளங்களை கணக்கெடுப்பு செய்து அதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செல்வி (அ.ம.மு.க.):- மன்னார்குடி கிழக்கு பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டும்.

செந்தில்செல்வி (அ.ம. மு.க.):- கழிவுநீர் வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

தடுக்க வேண்டும்

பாரதிமோகன் (தி.மு.க.):- 6-ம் நம்பர் வாய்க்கால் மேற்கு பகுதி சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்.

மகாலட்சுமி (தி.மு.க.):- கழிவுநீர் கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மீனாட்சி (தி.மு.க.):-ஆஞ்சநேயர் கோவில் சந்து ரோட்டில் மூட்டை மூட்டையாக குப்பைகள் கொட்டி செல்கிறார்கள். அதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமதி (தி.மு.க.):- தெற்கு வீதி சாலையை சீரமைக்க வேண்டும்.

பாலமுருகன் (தி.மு.க.):- தெப்பக்குளம் மேலவீதி சாலையை சீரமைக்க வேண்டும்.

ஏ.பி.அசோகன் (தி.மு.க.):- மோர் குளம், முதலிகுளம் ஆகிய குளங்களுக்கு படிக்கட்டு கட்டி தர வேண்டும்.

வெங்கடேஷ் (தி.மு.க.):- பூக்கொல்லைரோடு மற்றும் எழில் நகர் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

ராஜபூபாலன் (தி.மு.க.):- ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்துதர வேண்டும்.

பன்றிகள்

ஆசியாபேகம் (தி.மு.க.):- வார்டு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சூர்யகலா (அதிமுக) :- தஞ்சை சாலை காளவாய்க்கரை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

ரவிச்சந்திரன் (தி.மு.க.):- 14-வது வார்டு பகுதியில் மண்சாலையாக இருக்கும் சாலையை தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும்.

பாலசுப்ரமணியம் (தி.மு.க.):- 26-வது வார்டு பகுதியில் உள்ள குளத்தில் கழிவு நீர் சென்று தேங்கி நிற்கிறது. இந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

அடிப்படை வசதிகள்

நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன்:-

நகராட்சியில் உள்ள முக்கியமான அனைத்து குளங்களுக்கும் நீர் வழிப் பாதைகள் தற்போது தூர்வாரி சீர் செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி, சாலைகளை சீரமைக்கும் பணி, மின் விளக்கு அமைக்கும் பணி, குடிநீர் விநியோகம் என அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சாலைகள் சீரமைத்து தரப்படும். பன்றிகளைகட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story