பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x

பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, கிளை தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், ஜனாதிபதி- துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், பழையனூர்-ஓடாத்தூர் சாலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நலன் கருதி உடனடியாக மேம்பாலம் அமைக்கவும், வன்னிக்கோட்டை காலனி மயானத்திற்கு குடிநீர் வசதி செய்த தரக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Next Story