காலி இடங்களை வீட்டுமனையாக விற்பனை செய்ய அனுமதிபெற வேண்டும்


காலி இடங்களை வீட்டுமனையாக விற்பனை செய்ய அனுமதிபெற வேண்டும்
x

காலி இடங்களை வீட்டுமனையாக விற்பனை செய்ய அனுமதிபெற வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி சார்பில் கிராம சபைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் சித்ரா மருது தலைமை தாங்கினார். கூட்டத்தில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன், விரிவாக்க அலுவலர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் வினோத், தலைமை ஆசிரியர்கள் ஓம் சக்தி நகர் ராபர்ட் ஜெயராஜ், பட்டணம்காத்தான் மகேசுவரி, சாத்தான்குளம் ராம் நகர் நேவிகா பாரத மணி, சங்கந்தின்யான் வலசை செல்வி, உதவி தலைமை ஆசிரியர் சீனி இப்ராகிம், சங்கந்தியான் வலசை ஆசிரியை பாக்கியம், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் நலாயினி, உச்சிப்புளி வேளாண்மை உதவி அலுவலர் ஜெயக்கொடி, இலவச சட்ட பணிகள் குழு விஜயா, வழக்கறிஞர் பாலமுருகன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் சக்தி, கிராம சுகாதார செவிலியர் காங்கேஸ்வரி, அங்கன்வாடி பணி யாளர்கள் சேதுபதி நகர் ராஜ தர்ஷினி, பட்டணம் காத்தான் திருமலர் செல்வி, சாத்தான்குளம் புவனேஸ்வரி, மின்சார துறை பணியாளர்கள் ரவி, ஈஸ்வரன், பழனி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஊராட்சி செயலர் நாகேந்திரன் ஊராட்சியின் செலவு பட்டியல்களை படித்தார். கூட்டத்தில் அரசிடம் இருந்து பெறப் பட்ட 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட காலி மனை இடங்களை வீட்டுமனையாக மாற்றம் செய்யும்போது ஊராட்சியின் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பெறாதவர்கள் மீது ஊராட்சி சட்ட திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் முறையாக காவிரி கூட்டு குடிநீர், பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த போதிய நடவடிக்கை. சங்கந்தியான்வலசை சமுதாய நலக்கூடம் அமைக்கவும் ஊராட்சி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களை வறுமை கோடு பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

கூட்டத்தில் முருகேசன், பாரதி நகர் மாரியப்பன், நாட்டுக் கோட்டை ஜெய கார்த்திகேயன், சாத்தான்குளம் லிங்குச்சாமி, பாக்கியராஜ், மலைராஜ், பெரியசாமி, பாண்டி மூர்த்தி, சங்கந்தியான்யான் வலசை ஆறுமுகம், சண்முகவேல், செல்லம், கற்பூர வலசை கணேசன் மற்றும் ஊராட்சி உறுப் பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதள பொறுப் பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சித்ரா மருது ஆலோசனையின்படி ஊராட்சி செயலர் நாகேந்திரன் செய்திருந்தார்.


Next Story