ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இலக்கியம்பட்டி

தர்மபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வித்யா வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் துரைசாமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில் வீடு வீடாக குப்பை சேகரிக்க தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள் தமிழரசி சேகர், கங்காதரன், ஜெயக்குமார், காமராஜ், ஜெயலட்சுமி புகழ் மணி, வெண்மதி, ஊராட்சி பணியாளர்கள் காந்தி, சுப்பிரமணி, சாந்தகுமார், சக்திவேல் உள்பட பல கலந்துகொண்டனர்.

செம்மாண்டகுப்பம்

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவி அருள் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் இடும்பன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மெகருனிஷா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

செம்மாண்ட குப்பம் முதல் காலனி வரை கழிவுநீர் கால்வாய் கட்டுதல், ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கால்நடை மருத்துவர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, வேளாண்மை அலுவலர் ரேவதி, வார்டு உறுப்பினர்கள் சதீஷ், கீதா முத்துக்குமார், பச்சியப்பன், பேபி காசி, ராமஜெயம், பழனியம்மாள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பூகானஅள்ளி ஊராட்சி

பாலக்கோடு ஒன்றியம் பூகானஅள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டம் என்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஊர்நல அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் பச்சியப்பன், ஒருங்கிணைப்பாளர் பெருமாள், வேளாண்மை துறை உதவி பொறியாளர் அனிதா, கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பென்னாகரம் ஒன்றியம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சிகுட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய உதவி பொறியாளர் இளவேனில், வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர் செந்தில், கிராம சுகாதார செவிலியர் ராதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குட்டி, துணைத்தலைவர் வசந்தி, கற்பகம், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

பேடரஅள்ளி

ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் தமிழ்ச்செல்வி சேதுமுருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கவிதா விஸ்வநாதன், ஊர்நல அலுவலர் சாந்தி, வேளாண்மை மேற்பார்வையாளர் பத்மினி, ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள், மகளிர் உதவி குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

நல்லம்பள்ளி ஒன்றியம் பேடரஅள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டம் பூச்செட்டி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆண்டி, ஊராட்சி செயலாளர் கணேசன் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவாடி

சிவாடி ஊராட்சிக்குட்பட்ட கந்துக்கால்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் பற்றியும், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன.

இதில் ஊராட்சி செயலர் சித்ரா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story