இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சக்கணன் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் லிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட துணை தலைவர்களாக சமுத்திரம், செந்தில்குமார், பொருளாளராக பழனி குமார் மற்றும் 19 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் சாயப்பட்டரை தொடங்குவது தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடை பயணம் மேற்கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பது. பட்டம்புதூரில் ஜவுளி பூங்கா விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 11-ம் தேதி நடைபெறும் மதநல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story