திருப்புவனம் யூனியன் கூட்டம்
திருப்புவனம் யூனியன் கூட்டம் நடந்தது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மன்றப் பொருள் தீர்மானங் களை மேலாளர் கார்த்திகா வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மின்சாரம், வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:- பாலசுப்பிரமணியன்: ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு வேலைகள் தேர்வு செய்யும் போது அனைத்து உறுப்பினர் களுக்கும் சமநிலையில் வழங்க வேண்டும். சுப்பையா : கிராமப் பகுதிகளில் பல சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் மோசமாக உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைகளை புதுப்பிக்க வேண்டும். ஈஸ்வரன் : திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பலர் உள்ளபோது வெளி நபர்களுக்கு வேலை வழங்குவது வருத்தத்தக்கது. இவ்வாறு பேசினார்கள் கூட்டத்தின் முடிவில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆணையாளர் அங்கயற்கண்ணி உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.