கீழாயூரில் கிராம சபை கூட்டம்


கீழாயூரில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழாயூரில் கிராம சபை கூட்டம் நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழாயூர் 12-வது வார்டு பகுதியில் வார்டு பகுதி கிராம சபை கூட்டம் வார்டு உறுப்பினர் ஷேக் அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணை தலைவர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் வாழ்த்தி பேசினார். கால்நடை மருத்துவர் முருகன் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும், வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய்களுக்கு அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

சுகாதார ஆய்வாளர் பிச்சை துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து பேரூராட்சியை தூய்மையாக வைக்க அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். கீழாயூர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா, தாஸ்கான் காலீது ஆகியோர் துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்து கழிவுநீர் வாய்க்கால்களை புதுப்பித்து தர கேட்டுக்கொண்டனர்.

செயல் அலுவலர் கோபிநாத் அனைத்து பகுதிகளுக்கும் பேட்டரியில் இயங்கும் துப்புரவு வாகனம் புதிதாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். முடிவில் 12-வது வார்டு உறுப்பினர் ஷேக் அப்துல் ஹமீது நன்றி கூறினார்.


Next Story