மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்


மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் நடந்த மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், திம்மராஜ், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் ரவிகுமார் வரவேற்றார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ. வுமான ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும், மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன் உள்பட பலர் பேசினர். மேயர் சத்யா பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க அமைச்சர் ஆர்.காந்தி, கட்சி தலைமையிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் கூட்டத்தில், நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலின் போது தேர்தல் பொறுப்பாளர்களாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு கைக்கெடிகாரம் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை அமைச்சர் காந்தி, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வழங்கி பாராட்டினார். இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story