டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராஜா, துணை தலைவர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் முருகன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் வாழ்த்தி பேசினார். இதில் மாவட்ட இணை செயலாளர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகன், சரவணன், நிர்வாகி வேலுச்சாமி மற்றும் திண்டுக்கல், நத்தம், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர் தாலுகா நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், கேரள மாநிலத்தை போன்று தமிழக டாஸ்மாக் நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்சமாக ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கு இணையாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம், சலுகைகள் வழங்க வேண்டும்.

மேலும் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு துறையில் வேலை வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. வசதி மற்றும் பணி ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story