இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:16+05:30)

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய சேர்மன் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊர்காவலன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாலை, பயணியர் நிழற்குடை, புதிய ரேஷன் கடை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இதில், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் பவுன்ராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் தமிழரசன், பாரதிராஜன், ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.


Next Story