பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மகளிர் மன்றத்தின் சார்பாக பெண்கள் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கி இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்தும், மாணவிகள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம் குறித்தும் பேசினார். கல்லூரி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் நிலோபர் பேகம் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வக்கீல் சம்பூர்ணா மாணவிகள் வன்கொடுமைக்கு எதிராக தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்றும், பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்து கூறினார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் இயற்பியல் துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.


Next Story