ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுகூட்டம்
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுகூட்டம் நடந்தது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சீர்காழி வட்டார பொதுக்குழு கூட்டம் சீர்காழியில் வட்டார தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் பாலாஜி, துணைத்தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். இதில் செயலாளர் ஸ்ரீராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், சீர்காழி வெள்ள பாதிப்பினை நேரில் பார்வையிட்டு உடனடி நிவாரணம் வழங்கியது, பள்ளிக்கல்வித்துறையில் கலை திருவிழா திட்டம் மூலம் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவது போன்ற தமிழக முதல்-அமைச்சரின் செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவிப்பது. பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், பகுதிநேர பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சேக்கிழார் நன்றி கூறினார்.