கிராம பஞ்சாயத்து திட்ட கூட்டம்


கிராம பஞ்சாயத்து திட்ட கூட்டம்
x

கிராம பஞ்சாயத்து திட்ட கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்களகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழபனையடியேந்தல் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டம் நடை பெற்றது. ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி னார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய கார்த்திக்,ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பொன்னுமணி வரவேற்றார். இதில் சுகாதார அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு துறை சம்பந்தமான திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story