கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
நயினார்கோவில்,
நயினார்கோவில் யூனியனில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர், நீர்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சங்க ஒன்றிய தலைவர் பாலா, ஒன்றிய செயலாளர் விஜயன், ஒன்றிய பொருளாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஓ.டி.எச். இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story