இளையான்குடி பேரூராட்சி கூட்டம்


இளையான்குடி பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பரமக்குடி சாலையில் குடிநீர் பகுப்பாய்வாளர் தேர்வு செய்துள்ள இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை இடித்து புதிய கழிப்பிடம் அமைக்கவும், கண்மாய்க்கரை, மத்திய கூட்டுறவு வங்கி அருகில், பூச்சியனேந்தல் பகுதியில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கவும், கீழாயூர் காலனி, ரசூலாசமுத்திரம், சோதுகுடி, பகைவரை வென்றான், பூச்சியனேந்தல் ஆகிய காலனிகளில் சாலைகள், வடிகால்கள், தெருவிளக்குகள், புது மயானங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் ரேஷன் கடை கட்டிடங்கள் கட்டவும், புதிய எல்.இ.டி. விளக்குகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின்போது, முன்னாள் பேரூராட்சி தலைவரும், 8-வது வார்டு கவுன்சிலருமான செய்யது ஜமீமா கூறுகையில், எனது வார்டு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக எந்த பணிகளும் சரிவர நடைபெறவில்லை. தக்கட்டை தெருவில் போர்வெல் அமைப்பதற்கு பொது நிதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடிப்படையில் பணிகளை செய்ய வேண்டும் என்றார். இதில், மன்ற உறுப்பி்னர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.


Next Story