தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
இளையான்குடி வடக்கு ஒன்றிய பேரூர் தி.மு.க. செயல் வீரர்கள்கூட்டம் நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி வடக்கு ஒன்றிய பேரூர் தி.மு.க. செயல் வீரர்கள்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலர் நஜீமுதீன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, வாக்குச்சாவடி குழு அமைப்பது, அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமிப்பது, பேராசிரியர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது, இளையான்குடி ஒன்றியத்தில் பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாவட்ட மாணவரணி சந்திரசேகர், மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.