நல்லாட்சி வார சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்


நல்லாட்சி வார சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பர்கூரில் நல்லாட்சி வார சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூரில் நல்லாட்சி வார சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

குறை தீர்க்கும் கூட்டம்

பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்வரின் முகவரித்துறை சார்பாக நல்லாட்சி வாரம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், முதல்வரின் முகவரித்துறை சார்பாக நல்லாட்சி வார சிறப்பு குறை தீர்க்கும் முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. அதன் அடிப்படையில் பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

தொடர்ந்து, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். மொத்தம் 312 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் 196 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், பர்கூர் தாசில்தார் பன்னீர் செல்வி, பர்கூர் தனி தாசில்தார் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ராமகணேஷ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story