தர்மபுரியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்


தர்மபுரியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் வருகிற 24-ந் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெறுவதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நலவாரியங்களில் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி, தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பணி பதிவேடு பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்டிட சங்க மாவட்ட செயலாளர் மணி, போக்குவரத்து சம்மேளனத்தின் மண்டல பொதுச்செயலாளர் நாகராஜ், மாநில துணை செயலாளர் சீனி ரவி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், என்.எப்.டி.இ. ஓய்வு சங்க மாவட்ட செயலாளர் முனியன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story