உடுமலையையடுத்த குரல்குட்டை, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.


உடுமலையையடுத்த குரல்குட்டை, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
x

உடுமலையையடுத்த குரல்குட்டை, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலையையடுத்த குரல்குட்டை, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம்

குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழுத்தலைவர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆசிரியர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கவுரி கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாணவர்கள் வருகை, கற்றல்திறன், பள்ளியின் சூழல், பராமரிப்பு, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர் பங்கேற்பு, இடைநிற்றலை தடுத்தல், பள்ளிவராக் குழந்தைகளை கண்டறிந்து சேர்த்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பள்ளியில் உடனடியாக செய்யவேண்டிய குடிநீர் தொட்டி அருகே வடிகால், நுழைவாயில் முன்புறம் மழைநீர் வராமல் தடுப்பு, பள்ளி உள்சுவர்களில் விரிசல் உள்ள பகுதிகளை உடனடியாக சீரமைப்பது, சுற்றுச்சுவர் பழுது சீரமைப்பு உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை செய்ய தீர்மானிக்கப்பட்டது. பள்ளிக்கு இடைக்கால ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட கலையரசியை அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு அடையாளஅட்டை, உறுப்பினர் கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.

குரல்குட்டை பள்ளிக்கூட பயன்பாட்டிற்காக ஒரு பீரோ வழங்கிய ராமசாமி, 5 நாற்காலிகள் வழங்கிய பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராகல்பாவி

ராகல்பாவியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டம் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தின் மூலமாக பள்ளியில் செய்யப்பட வேண்டிய பணிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தினால் மாணவர்களுக்கு காய்ச்சல் உட்பட நோய்கள் வராமல் பாதுகாக்கும் வண்ணம் கவனத்துடன் இருக்குமாறு பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பச்சை நிற வால் நட்சத்திரத்தைப் பற்றி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


Related Tags :
Next Story