விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி வௌ்ளிக்கிழமை காலை 10 மணியளவில், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story