தர்மபுரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு


தர்மபுரியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமை தாங்கினார். நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சோளப்பாடி பழனி, நீலாபுரம் செல்வம், நகர அவை தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர்கள் அறிவாளி, மலர்விழி சுரேஷ், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர பொருளாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிநிதிகள் கஸ்தூரி பலராமன், மாதையன், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., டாக்டர் சரோஜா, தலைமை கழக பேச்சாளர் தர்மராஜன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், மோகன், பழனிசாமி, அசோக்குமார், அண்ணா பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.


Next Story