ஓசூர் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூரில் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளரும், ஓசூர் மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், மாநில கொள்கை பரப்புக்குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் பி.முருகன், சின்னசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். வருகிற ஜூன் 3-ந் தேதிக்குள் கட்சியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைத்தல், கட்சி வளர்ச்சி பணிகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கோபி, மண்டல தலைவர் ரவி, வெங்கடேஷ், ராமு, திம்மராஜ்உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story