காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டன கூட்டம்
காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டன கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வட்டார, நகர தலைவர்கள் கண்டன கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு மாநில செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், மண்டபம் மேற்கு அன்வர்அலி, போகலூர் கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு இபுராகிம், கோபால், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஹனீப்கான், இலக்கிய அணி முருகேசன், ரவி, பாபு, பாண்டி, ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்புல்லாணியில் வட்டார தலைவர் சேதுபாண்டியன் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் சேகு, முகமது உசேன், ராசிக், செய்யது இபுராகிம், பழனி, மாவட்ட துணைத்தலைவர் ரெத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டங்களில் வருகிற 30-ந் தேதி வரை காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.