கிருஷ்ணகிரியில் வன உரிமைக்குழு கூட்டம்


கிருஷ்ணகிரியில் வன உரிமைக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் வன உரிமைக்குழு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமயில் நடந்தது.

வன உரிமைக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

பழங்குடியினர் மற்றும் இதர மரபு வழி வன வாழ்வினர் சட்டம் 2006 மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மரபு வழி வன வாழ்வினர் விதிகளின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 71 பேருக்கு தனிநபர் உரிமைகள் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் கேரட்டி கிராமத்தில் வசிக்கும் 42 பழங்குடியினர் குடும்பங்களுக்கும், தொட்டமஞ்சு கொடக்கரை வன கிராமத்தில் வசிக்கும் 114 பழங்குடியினர் குடும்பங்களுக்கும் தனிநபர் வன உரிமையும் மற்றும் 4 சமுதாய வன உரிமைகளும் முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது.

கிராம சபை கூட்டம்

மாவட்டத்தில் மொத்தம் 67 கிராம சபை குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 847 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது அஞ்செட்டி தாலுகா கேரட்டி மற்றும் கொடகரை கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு உதவி கலெக்டர்கள் மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு தனிநபர் உரிமை (வன உரிமை பட்டா) மற்றும் சமுதாய உரிமைகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அனைத்து கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு தகுதியான நபர்களுக்கு வனஉரிமை சட்டத்தின் கீழ் வன உரிமை பட்டா மற்றும் சமுதாய உரிமைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ், மாவட்டம்-கிராம வன உரிமைக்குழு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story