ஜமாபந்தி கூட்டம்


ஜமாபந்தி கூட்டம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜமாபந்தி கூட்டம் வருகிற 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி கூட்டம் வருகிற 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது.

2022-2023-ம் ஆண்டுக்கான கோரிக்கை மனுக்கள் தொடர்பாக ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும், மற்றும் https://cmhelpline.tnega.org/support/iipgcms/ShowHomePage.do#Cases/new என்ற இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story