பாலேகுளி கிராமத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


பாலேகுளி கிராமத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 1:15 AM IST (Updated: 28 Jun 2023 12:01 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாலேகுளி கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன் கலந்து கொண்டு தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவி முருகேசன், விமலா பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் குமரவேல், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story