நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கூட்டம்
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கூட்டம் நடந்தது
திருநெல்வேலி
பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ''பள்ளிகளில் சிறப்பான முறையில் நாட்டு நலப்பணித்திட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்களில் மருத்துவ முகாம், கால்நடை முகாம், கண் சிகிச்சை முகாம், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் நலன்களை காக்கும் வகையிலும், திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் செயலாற்ற வேண்டும்'' என்று கூறினார்.
தலைமை ஆசிரியர் கன்னீஸ் பீட்டர் முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி வரவேற்று பேசினார். சிறப்பு முகாம்கள் குறித்து ராதா, மரிய இனிகோ, சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். வேதமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story