சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்


சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வீமன் வரவேற்றார். துணைத்தலைவர் ரீட்டாமேரி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலாளர் தேசிங்கு வேலை அறிக்கை சமர்பித்தார். சி.ஐ.டி.யூ. மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் ஜெயந்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்கள் சத்துணவு மையங்களுக்கு உணவூட்டு செலவினம் வழங்காமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும், சமையல் உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இம்மாதம் இறுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜாக்டோ- ஜியோ மனித சங்கிலியில் அனைத்து ஒன்றியங்களில் இருந்து ஊழியர்கள் கலந்துகொள்வது, சென்னையில் நடைபெறும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க சிறப்பு மாநில மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.


Next Story