முன்னாள் மாணவிகள் சந்திப்பு


முன்னாள் மாணவிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:38+05:30)

முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை,

நாட்டரசன் கோட்டையில் உள்ள கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 1967-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1967-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவிகள் பள்ளி வளாகத்தில் சந்தித்து தங்களது மலர் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்தப் பள்ளியில் படித்த மாணவிகளில் பலா் வெளிநாடு, ஐ.டி. அரசு பள்ளி ஆசிரியை மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனா். இவர்களை பள்ளி குழு தலைவர் கண்ணப்பன், செயலாளர் நாகராஜன், தலைமை ஆசிரியை மகாலட்சுமி, பள்ளிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் லதா, விமலா ஆகியோர் வரவேற்று கலந்துரையாடினார்கள்.


Next Story