நெல்லையில் மெகா தூய்மை பணி
நெல்லையில் மெகா தூய்மை பணி நடந்தது.
நெல்லையில் மெகா தூய்மை பணி நடந்தது.
விழிப்புணர்வு முகாம்
தமிழகம் முழுவதும் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தினை கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி நெல்லை மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி' மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த தூய்மை பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் ரேவதி பிரபு, உதவி கமிஷனர் லெனின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மரக்கன்றுகள்
நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 250 மரக்கன்றுகளை துணை மேயர் கே.ஆர்.ராஜு தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தச்சநல்லூர் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். பாளையங்கோட்டை மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், முருகன், சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் டார்லிங் நகர், ராஜேந்திர நகர், ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தோணி, நடராஜன் ஆகியோர் தலைமையில் பாரதி நகர், அத்தியடி தெரு, ராவுத்தர் தெரு ஆகிய பகுதிகளில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.