மெகா கொரோனா தடுப்பூசி முகாம்


மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
x

மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கரூர்

நொய்யல்,

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பு.குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேமங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நொய்யல் பெரியார். ஈ. வே. இரா.அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டனர். அதேபோல் முகாமிற்கு வரமுடியாதவர்களுக்கு சுகாதாரத்துறையினர் வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போட்டனர்.


Next Story