வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு


வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு
x

காளையார்கோவிலில் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு செய்தவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் நகர் வர்த்தக சங்கம் மூலமாக தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கு பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சிவகங்கை மாவட்ட பொருளாளர் ஜான் போஸ்கோ, மாவட்ட இணைச் செயலாளர் முத்துசாமி, நகர் வர்த்தக சங்க தலைவர் ஜேம்ஸ், செயலாளர் செந்தில், பொருளாளர் ஷாஜகான் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கடைகளுக்கு நேரில் சென்று பதிவுச் சான்றுகளை வழங்கினர். இதுவரை பதிவு சான்று கேட்டு விண்ணப்பிக்காதவர்களை விண்ணப்பிக்குமாறு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.


Next Story